திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறக்காமல் இதை எடுத்துட்டு போங்க…!

Author: Babu Lakshmanan
24 December 2022, 12:33 pm

உலகளவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உறுமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. பின்னர், தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், படிப்படியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1123

    0

    0