அரசுக்கு ஆபத்து? முதலமைச்சர் வர உள்ள நிலையில் திருப்பதி தங்க கொடி மரத்தில் சேதம்.. தேவஸ்தானம் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2024, 1:51 pm
திருப்பதியில் இன்று முதலமைச்சர் வரும் நிலையில் கொடி மரத்தின் உச்சியில் வளையம் உடைந்து சேதமடைந்ததால் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை மணி 5:45ற்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கொடியேற்றத்திற்கு தேவையான கயிற்றை கோவில் அர்ச்சகர்கள் கொடி மரத்தின் உச்சியில் உள்ள வளையத்தில் பொருத்தும் முயற்சியில் சற்றுமுன் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வளையம் திடீர் என்று உடைந்து விழுந்து விட்டது. இதனால் கொடி மரத்தில் கொடியேற்றத்திற்கு தேவையான கயிற்றை பொறுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
இதையும் படியுங்க: பூக்கடையில் லாபம் தருவதாக ₹1 கோடி மோசடி… அலற விட்ட தம்பதி : ஷாக் ஆன கோவை!
இந்த நிலையில் உடைந்து விழுந்த வளையத்தை பொருத்தி கொடி மரத்தை சீரமைக்கும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இன்று மாலை கொடியேற்றம் நடைபெற இருந்த நிலையில் கொடி மரத்தில் ஏற்பட்ட இந்த சேதம் தேவஸ்தான நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.