‘என்ன, சாரி.. மண்ணாங்கட்டி சாரி’.. வரவேற்பு உரையில் பெயரை மறந்த பொறியாளர் ; கடுப்பாகி திட்டிய திமுக எம்எல்ஏ!!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 4:28 pm

திருப்பூர்; சட்டமன்றத்தில் பேசினால் உன் வேலை போய்விடம் என்று நிகழ்ச்சியில் சொல்ல மறந்த பொறியாளரை திமுக எம்.எல்.ஏ திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பார்வையிட்டார். இதனையடுத்து, அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் திமுகவைச் சேர்ந்த தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வில் பேசிய பொறியாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் பெயரை கூற மறந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.செல்வராஜ், என் பெயரை ஏன் சொல்லவில்லை, சட்டமன்றத்தில் பேசினால் உன் வேலை போய்விடும் என்று சொல்ல, பயந்து போன பொறியாளர் சாரி என்று கூறினார்.

https://player.vimeo.com/video/784339775?h=a0d99411cb&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

ஆனால், அதனை ஏற்க மறுத்த திமுக எம்எல்ஏ செல்வராஜ், சாரியும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்ல, கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!