சாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி பொறுத்தியதால் சர்ச்சை ; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி.. கிளம்பிய எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 11:23 am

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வரும் டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீபத்திருநாளன்று அண்ணாமலையாரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500க்கும் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு, கண்காணிப்பு கேமராவை கோவில் நிர்வாகம் பொறுத்தியுள்ளது. கோவில் நிர்வாகத்தின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இந்து அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பையும் கிளப்பியது.

இதையடுத்து, உடனடியாக துவாரபாலகர் நெற்றியில் இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி வேறு இடத்தில் மாற்றி பொறுத்தப்பட்டது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 537

    0

    0