‘கை’சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஜிகே வாசன்… அதிர்ந்து போன பாஜக தொண்டர்கள்… சட்டென சமாளித்த வீடியோ வைரல்!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 10:04 am

நாடளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்ததில் ஈடுபட்ட ஜிகே வாசன், கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் த.மா.க. போட்டியிடுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் வேணுகோபால் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து நேற்று த.ம.கா. தலைவர் ஜிகே வாசன் பிரசாரம் மேற்காண்டார்.

திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளர் வேணுகோபாலுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், தனது கையில் வைத்திருந்த சிறிய வடிவிலான சைக்கிளை எடுத்து மக்களிடம் காட்டி, “வேணுகோபாலுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்திலேயே ஓட்டு போட வேண்டும்’, என வாக்கு சேகரித்தார். ஜிகே வாசனின் பேச்சை கேட்டு அதிர்ந்து போன த.மா.கா. மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிர்ந்து போகினர்.

மேலும், கை சின்னம் இல்லை, சைக்கிள் சின்னம் என்று அனைவரும் கூற, தவறை உணர்ந்த ஜிகே வாசன் அப்படியே சமாளித்தார். அதாவது, “ஒரு நிமிடம் நிமிடம்.. வரனே்.. வரேன்.. கையை நகர்த்தி கொள்ளுங்கள்” எனக்கூறினேன் என்று தெரிவித்து சமாளித்தார். அதன்பிறகு ‛‛வேணுகோபாலுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, ஜிகே வாசன் சின்னத்தை மாற்றி ஓட்டு கேட்டு, பின்னர் சமாளித்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!