சிஏஜி அறிக்கையை வைத்து மத்திய அரசு மீது ஊழல் குற்றம்சட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
மத்திய அரசு 1 கிலோமீட்டர் தூரம் ரோடு போடுவதற்கு, ரூ.250 கோடி கணக்கு காட்டி உள்ளார்கள். இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கணக்கு காட்டி உள்ளார்கள் என்று அமைச்சர் உதயநிதி கூறியதை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது X தளப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, 1 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க ரூ.310 கோடி செலவிட ஒப்பந்தம் போட தமிழக அரசு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இது அமைச்சர் உதயநிதிக்கு தெரியுமா..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 16,2022 அன்று சென்னை துறைமுகம் – மதுரவாயல் விரைவு மேலடுக்கு சாலை 19 கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு ரூபாய். 5885 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். அதாவது 1 கிலோ மீட்டருக்கு 310 கோடி ரூபாய் கணக்கு காண்பித்து உள்ளது அமைச்சரான தங்களுக்கு தெரியாதா? அப்படி என்றால் தமிழக அரசு ஊழல் செய்கிறது என்று சொல்கிறீர்களா?
இறந்து போனவர்களை மருத்துவ காப்பீடு திட்டத்தில் கணக்கு காட்டி உள்ளது மாநில அரசுகள் என்று சி ஏ ஜி அறிக்கை சொல்கிறது. காப்பீடு திட்டத்தில் தமிழகத்திலும் இறந்து போனவர்களை மாநில அரசு கணக்கு காண்பித்துள்ளதாக சிஏ ஜி அறிக்கை சொல்கிறதே? அதற்கு உங்களின் பதில் என்ன?
யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் என்பார்கள்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.