தமிழக அமைச்சரவையில் டாப் இடத்தில் துணை முதல்வர் உதயநிதி… வெளியான லிஸ்ட் : மூத்த அமைச்சர்களுக்கு டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2024, 8:09 pm
தமிழக அமைச்சரவையின் வரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உதயநிதிக்கு டாப் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. புதியதாக 2 அமைச்சர்கள் இடம்பிடித்தனர். அதே போல செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அதே இலாக்காக்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. முக்கிய அமைச்சர்களின் இலாக்கா மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும் முதலமைச்சர்தான் பட்டியலில் முதல் ஆளாக இருப்பார்.
இந்த பட்டியலில் மூத்த அமைச்சராக உள்ள துரைமுருகன் 2வது இடத்திலும், புதியதாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி 3வது இடத்திலும் உள்ளார்.
அந்த வரிசையில் 4வது இடத்தில் கேஎன் நேரு, 5வது இடத்தில் ஐ.பெரியசாமி, 21வது இடத்தில் செந்தில் பாலாஜியும், 35வது இடத்தில் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.