முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்: பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார்..!!

Author: Rajesh
30 March 2022, 8:44 am

சென்னை: 4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் ஏப்ரல் 2ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

ஏப்ரல் 1ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். ஏப்ரல் 2ம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!