டிச.,4ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ; ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பாரா..?

Author: Babu Lakshmanan
26 November 2022, 9:47 am

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

அண்மையில் இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிதி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் முடிவில், 2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 நாடுகளின் மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 5ம் தேதி டெல்லியில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.

மேலும், தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 430

    0

    0