முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி : அதிர்ச்சியில் அரசு வட்டாரங்கள்…!!
Author: Babu Lakshmanan12 July 2022, 5:42 pm
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் அதிகபட்ச பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இப்படியிருக்கையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் இருதவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், சற்று உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் வீட்டு தனிமையில் இருப்பதாகவும், வீட்டிலேயே தொற்று பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.