தேர்வு தேதியில் மாற்றம் இல்லை: குழப்பம் வேண்டாம்: அறிவித்த டிஎன்பிஎஸ்சி…!!

Author: Sudha
17 August 2024, 9:03 am

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.7 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் 2 நாட்கள் முன்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அட்டவணையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டான ஹால் டிக்கெட் இன்னும் சில தினங்களில் வினியோகிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் இருந்த நிலையில் அவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பால் குழப்பம் எழுந்தது.

எந்த தேதியில் தேர்வு நடக்கிறது என்பதை டி.என்.பி.எஸ்.சி தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத்தேர்வு அறிவித்தபடி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி அளித்த விளக்கத்தை தொடர்ந்து தேர்வர்கள் குழப்பம் நீங்கி, நிம்மதி அடைந்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ