குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு.. வரும் ஜுலை 24ம் தேதி குரூப்-4 தேர்வு அறிவிப்பு… OMR தேர்வு முறைக்கு பதிலாக CBT முறை அறிமுகம்…!!
Author: Babu Lakshmanan29 March 2022, 5:09 pm
7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :- 7.382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு வரும் ஜுலை 24ம் தேதி நடைபெறும். நாளை முதல் 28ம் தேதி வரை குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குரூப்-4 தேர்வில் 200 மல்டி சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.
குரூப்-4 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழுக்க தமிழில் இருக்கும். தேர்வு 3 மணிநேரம் நடைபெறும்.சமூக நலத்துறையின் சிறார் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் பணியிடத்திற்கு CBT முறையில் தேர்வு நடத்த திட்டம். ஓ.எம்.ஆர். முறையில் ஒருமுறை விடையை குறித்துவிட்டால் மாற்ற முடியாது. ஆனால், கணினியை பயன்படுத்தி நடத்தப்படும் CBT முறையில் விடையை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஜுலை நடக்கும் குரூப்-4 தேர்வின் முடிவுகளை அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.