#ஒசிபஸ்வேண்டாம்போடா… கோவையைத் தொடர்ந்து ஈரோட்டிலும் கொந்தளித்த பெண்கள்..!! வைரல் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
1 October 2022, 2:47 pm

இலவச பேருந்து பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், ஓசி பஸ் வேணாம் போடா எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசி பஸ்ஸில் பயணம் செய்வதாகக் கூறினார். அவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பெண்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உங்களின் சொந்த பணத்தில் மக்கள் இலவச பயணம் மேற்கொள்ளவில்லை என்றும், மக்களின் வரிப்பணத்தில் தான் பயணிப்பதாகக் கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், ” நான் இலவசமாக பயணிக்க மாட்டேன், காசு வாங்கிட்டு டிக்கெட்டை கொடு,” எனக் கூறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட்டை பெற்று பயணம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதிமுகவினர் திட்டமிட்டே இதுபோன்று செய்ததாக திமுகவினர் குற்றம்சாட்டினர். அதேவேளையில், டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்த மூதாட்டி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அதனை கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மறுத்து விட்டார்.

இந்த நிலையில், ஓசி பஸ் வேணாம் போடா எனும் ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதோடு, கோவையைத் தொடர்ந்து ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள், ஓசி பயணம் வேண்டாம்… காசு வாங்கிட்டு டிக்கெட்டை கேட்டு வாங்கும் வீடியோவும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 544

    0

    0