370 சட்டப்பிரிவு குறித்த உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. வரவேற்ற பிரதமர் மோடி!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 1:42 pm

370 சட்டப்பிரிவு குறித்த உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. வரவேற்ற பிரதமர் மோடி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்புரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 340

    0

    0