அதிமுகவுக்கு நாளை முக்கியமான நாள்.. பரபப்பான சூழ்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை : பொதுக்குழுவில் புது டெக்னிக்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 1:06 pm

அ.தி.மு.க.,வில் தற்போது உள்ள இரட்டை தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமையை அமல்படுத்தி, கட்சியின் பொதுச் செயலர் ஆவதற்காக, முன்னாள் முதல்வர் பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். அவருக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை பொதுக்குழுவை கூட்டி, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை தேர்வு செய்ய முடிவு செய்து, பொதுக்குழுக் கூட்டத்திற்கு, அவரது ஆதரவு தரப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து என்பவரும், தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.

கடந்த இரு தினங்களாக, இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இந்த வழக்கில், நாளை காலை 9:00 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார். இதனால், இரு தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, காமராஜ் ஆகியோருடன் பழனிசாமி தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதேபோல், பன்னீர்செல்வமும், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!