கோவை : ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அவரது உருவபொம்மையை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எரிக்க முயன்ற சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்றார். இதையடுத்து, அவர் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதேபோல், நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரங்கேறிய நிகழ்வுகளும் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், அக்கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆறு சாமி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆளுநரை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், ஆளுநரின் புகைப்படத்தை எரித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பு செயலாளர் ஆறுசாமி, பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது என தெரிவித்தார். தற்போது உள்ள ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லுவதற்கு கூட தயங்குகின்றார் என தெரிவித்த அவர், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய பிரதேசம் என்கின்ற சொல்லும் நாட்டை குறிப்பது தான் எனவும், அப்படி இருக்க தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் சமூக நீதி, பெண் உரிமை, பெரியார் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை கூற மறுப்பதாகவும், இவற்றை எல்லாம் கண்டித்து அவரது உருவ பொம்மை எரிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு கிடையாது, எனவும் தெரிவித்தார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
This website uses cookies.