கோவிலுக்குள் புகுந்து பக்தரை துரத்திய காட்டுப்பன்றி உயிர் நீத்த சோகம் : கோவிலுக்கு தோஷம் என கூறி தற்காலிகமாக நடை அடைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan23 July 2022, 7:35 pm
தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா மலை மீது உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா மலை மீது புகழ்பெற்ற லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் உள்ளது. இன்று மதியம் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் காட்டுப்பன்றி ஒன்று கோவில் அருகே உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வந்தது.
அதனை அங்கு இருந்தவர்கள் விரட்ட முயன்றனர். அவர்களை ஓட ஓட விரட்டிய பன்றி பின்னர் வழி தடுமாறி மலை மீது இருந்து விழுந்து இறந்துவிட்டது. உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் பன்றி உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் பன்றி புகுந்ததால் கோவிலுக்கு தோஷம் ஏற்பட்டுள்ளது என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். எனவே கோவிலில் தற்காலிகமாக நடை அடைப்பு செய்து சாஸ்திர ரீதியாக கோவில் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டது.
