தெலங்கானா : ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் நடத்திய ஏர்கன் துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் வாவிலாலா கிராமத்தில் பிரசாத் என்பவருக்கு பார்ம் ஹவுஸ் உள்ளது. அங்கு அதிக அளவில் குரங்குகள் வருவதால் அவற்றை விரட்ட பிரசாத் ஆன்லைன் மூலம் ஏர்கன் துப்பாக்கியை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய பார்ம்ஹவுசை சுற்றி மின்வேலி அமைத்தார் பிரசாத். எனவே அங்கு குரங்குகள் நடமாட்டம் குறைந்தது.
எனவே ஏர்கன் துப்பாக்கியை தனது தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் நாகராஜ் தங்கியுள்ள வீட்டில் வைறத்திருந்தார் பிரசாத். நேற்று முன்தினம் காவலாளி நாகராஜன் வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர்.
நேற்று வேலு என்ற அவருடைய உறவினர் வீட்டு 17 வயது சிறுவன் மற்றும் நண்பர்கள் வேலுவின் வீட்டிலிருந்த ஏர்கன் துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி (புகைப்படம்) எடுத்து கொண்டனர்.
பின்னர் அதனை இயக்கி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெளியேறி எதிரே வந்து கொண்டிருந்த ஜான்வி என்ற 4 வயது சிறுமியின் தலையில் பாய்ந்தது.
அதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுமி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். சப்தம் கேட்டு ஓடிவந்த நாகராஜ் உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த ஏர்கன் துப்பாக்கியை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும் தோட்ட உரிமையாளர் பிரசாத், துப்பாக்கியால் சுட்ட சிறுவன் வேலு ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் விளையாட்டாக சுட்டு விளையாடிய சம்பவத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
This website uses cookies.