மோதிக்கொண்ட சரக்கு – எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 2 பேர் பலி; ஜார்கண்டில் பயங்கரம்,..!!

Author: Sudha
30 July 2024, 1:19 pm

ஜார்கண்ட் மாநிலத்தில் மும்பை – ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.ஹவுராவில் இருந்து மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் அதிகாலை 03.45 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது இவ்வழித்தடத்தில் ஏற்கனவே தடம் புரண்ட சரக்கு ரயில் மீது ஹவுரா – மும்பை பயணிகள் விரைவு ரயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ள நிலையில் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்து சம்பவம் ரயில் பயணிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.கிட்டத்தட்ட 300 போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!