முக்கிய துறைகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2024, 2:20 pm
தமிழகத்தில் முக்கிய துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பல்வேறு துறை சார்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பணியிட மாற்றமானது நிர்வாக ரீதியிலானது என கூறப்படுப்படுகிறது.
அதன்படி, சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம். பொதுப்பணித்துறை செயலா ளராக மங்கத் தராம் சர்மா நியமனம்.
நீர்வளத்துறை செயலாளராக மணிவாசன் நியமனம். சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக சந்திரமோகன் மாற்றம். உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.