நிறைவேற்றப்படாத போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள்: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ்; பேச்சு வார்த்தைக்கு அழைப்பு,..

Author: Sudha
15 July 2024, 8:28 am

2021 சட்டமன்றத் தேர்தலின் போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக திமுக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறியிருந்தது.

ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்

ஓய்வூதியதாரர்களின் 103 மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும்

பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளையும் இன்னும் சில கோரிக்கைகளையும் வலியுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.

இதை அடுத்து தொழிலாளர் ஆணையத்தின் இணை ஆணையர் ஜூலை 24ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்

இது போன்ற சமரச பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே பல முறை நடந்துள்ளன. ஆனாலும் எதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மார்ச் 6ம் தேதி நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே ஜூலை 24 சமரச பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது அன்றைய தினம் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?