பிரபல தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் ஐ.டி ரெய்டு… அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் நீடிக்கும் சோதனை…!

Author: Babu Lakshmanan
7 November 2023, 12:59 pm

திருச்சியில் பிரபல தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள திமுக அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் தற்போது இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, விசாரணைக்காக குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். மணப்பாறை சாமிநாதன் என்பவர் பிரபல பைனான்சியராக ஆவார். மேலும் லட்சுமி காபித்தூள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எ.வ.வேலு வீட்டில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சியில் அவருக்கு தொடர்புடைய ஒரு வீட்டில் நடைபெறுகிற இந்த சோதனை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…