சிறையில் திருநங்கைக்கு தொல்லை; காட்டிக் கொடுத்த சிசிடிவி; எஸ்.பி, டிஐஜி அதிரடி பணி மாற்றம்,

Author: Sudha
17 July 2024, 8:19 am

திருச்சி, அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் தனிச்சிறையில், அடைக்கப்பட்டிருந்த திருச்சியைச் சேர்ந்த சாரங்கன், 32, என்ற திருநங்கையை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர், சாரங்கனை அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.இது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து திருநங்கை சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.இதையடுத்து, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில், சாரங்கன் புகார் அளித்தார்.

சுப்புராமன் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார்.

இரு நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., ஜெயபாரதியை வேலுார் பயிற்சிப் பள்ளிக்கு டி.ஐ.ஜி யாகவும், கண்காணிப்பாளர் ஆண்டாளை, திருச்சி பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பாளராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?
  • Close menu