பட்டப்பகலில் அரிவாள் எடுத்து வெட்ட துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர் ; கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் (வைரல் வீடியோ)

Author: Babu Lakshmanan
11 August 2022, 10:34 am

திருச்சி ; கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலரின் கணவர், அரிவாள் எடுத்து வெட்டுவதற்காக விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்தவர் நித்யா. திமுக ஒன்றிய கவுன்சிலர். இவரது கணவர் வெற்றிச்செல்வன். இவர் கன்னியாபட்டியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை குணசேகரன் பலமுறை கேட்டும் வெற்றிச்செல்வன் தரவில்லை. ஒரு கட்டத்தில் பணம் கேட்டவர்களை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை ஆதாரப்பூர்வமாக பதிவுச் செய்ய நினைத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள், அவரது வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு, குணசேகரனின் சகோதரர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்ட முயன்று இருக்கிறார்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் அரிவாளால் வெட்ட துரத்தும் காட்சிகளை, குணசேகரன் தரப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 779

    0

    0