திமுக ஒதுக்கியதே ரெண்டு சீட்டு… அதுல கணவனுக்கு ஒன்னு… மனைவிக்கு ஒன்னு : அதிருப்தியில் கட்சி தொண்டர்கள்…!!

Author: Babu Lakshmanan
3 February 2022, 2:16 pm

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இரு வார்டுகளில், கணவன் மற்றும் மனைவியே போட்டியிடுவது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்.,19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி, பாஜக, பாமக என பல்முனை போட்டி நிலவுகிறது. இடப்பங்கீட்டை முடித்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 2 வார்டுகள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 2 வார்டுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மற்றும் அவரின் மனைவி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

19வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாக குழு உறுப்பினர் தங்கமணியும், 19வது வார்பில் அவரது மனைவியும், மாதர் சங்கம் மணப்பாறை நகரத் தலைவியுமான மனோன்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 இடங்களிலும் கணவன், மனைவியை வேட்பாளர்களாக களம் இறக்கியிருப்பது அனைவரின் கவனத்தை பெற்றாலும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1410

    0

    0