திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி முதல்கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
மேலும் படிக்க: கரூர்-ல நீங்களா போட்டியிடுறீங்க…? ஜோதிமணி எங்கே..? திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த பொதுமக்கள்..!!
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர்.அங்கே அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. வீட்டிற்குள் புகுந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது. ஒரு பையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அரசியல் பிரமுகர் அதிமுகவை சேர்ந்தவர். எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் கணவர் அன்பரசன் அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி என குறிப்பிடத்தக்கது. மேலும், எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார். தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அன்பரசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தெரிந்து கொண்ட கட்சியின் வழக்கறிஞர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அன்பரசன் வீட்டின் முன்பு கூடினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.