நீங்க 2 எம்எல்ஏவைத் தான் தூக்குவீங்க.. நாங்க ஆட்சியையே தூக்கிடுவோம்… இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க வேணாம் : திமுகவுக்கு சூர்யா சிவா அதிரடி ரிப்ளை!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 5:11 pm

சென்னை : 2 பாஜக எம்எல்ஏக்களை தூக்கிவிடுவோம் என்று திமுக எம்பி கூறிய கருத்திற்கு பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா அதிரடியாக பதில் தெரிவித்துள்ளார்.

திமுகவில் தனக்கும், தனது தந்தைக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று கூறிய திமுக எம்பியும், மாநிலங்களவை திமுக குழு தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

மேலும், தான் கனிமொழியின் ஆதரவாளர் என்று கூறுவதாகவும், எனவே, எந்தக் காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குற்றம்சாட்டியிருந்தார். தனக்கு திமுகவில் வளர வாய்ப்பு இல்லை என்றும், அதனால்தான் தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக பாஜகவை தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறிய அவர், உண்மையிலேயே மோடி நேர்மையாளர் எனக் கூறினார்.

திமுகவினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், பல்வேறு திமுக சீனியர் தலைவர்கள் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

dmk mp senthil kumar - updatenews360

இதன் ஒரு பகுதியாக, பாஜகவில் திருச்சி சிவாவின் மகன் இணைந்தது தொடர்பாக தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம், எனக் கூறியிருந்தார்.

திருச்சி சிவா எம்.பி மகன் பாஜகவில் இணைகிறார் | trichy siva son surya will  join in bjp - hindutamil.in

இந்த நிலையில், தர்மபுரி எம்பியின் இந்த பேச்சு குறித்து சூர்யா சிவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவர்கள் எங்கள் இரண்டு எம்எல்ஏக்களை தான் தூக்குவார்கள். ஆனால் நாங்கள் அவர்களின் ஆட்சியையே தூக்கி விடுவோம். இந்த பூச்சாண்டி எல்லாம் பாஜக பயப்படாது,” என கூறியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1068

    0

    0