ஸ்ரீரங்கம் வைகுண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ; ரங்கா…ரங்கா… கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு…!

Author: Babu Lakshmanan
2 January 2023, 8:50 am

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

1600 வருடங்களுக்கு முன்பு பல்லவ காலத்தில் காலத்தில் கட்டப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய புகழ் பெற்ற காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதேசி தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்திலும், சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். மேலும், காலை 7:30 மணிக்கு, கருடசேவை நடைபெற உள்ளது. மேலும், பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல, திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். வைகுண்ட ஏகாதசியான அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு, அதிகாலை 4.48 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.

இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ