‘முதலில் என்கிட்ட வா மா’… அண்ணாமலையை வம்புக்கு இழுக்கும் காயத்ரி ரகுராம் ; சூர்யா சிவா விடுத்த ‘செம’ சவால்!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 10:52 am

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வம்புக்கு இழுக்கு காயத்ரி ரகுராமை, முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா சவால் விடுத்துள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி காயத்ரி ரகுராம் பாஜக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். அதுமுதல் அடுத்தடுத்து அண்ணாமலையை சீண்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துக்கு பாஜகவினரும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவால் காலி தொகதியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா..? என்று அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

BJP Gayathri - Updatenews360

அவரது இந்தப் பதிவுக்கு பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய திருச்சி சூர்யா சிவா, பல கேள்விகளை எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

டுவிட்டரில் அவர் விடுத்த பதிவில் கூறியிருப்பதாவது :- நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் அண்ணன் சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு, இல்லை என்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.

அதை விட்டுவிட்டு தேர்தலில் நிற்க விருப்பம் இல்லாதவரை, வாருங்கள் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்வது சரியா? நான் இந்த விவாதத்திற்கு வருவது தேவையற்றது. ஆனால் நீங்கள் கொடுக்கக்கூடிய பேட்டியில் எல்லா இடத்திலும் என் பெயரை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.

நீங்கள் என்னிடம் ஆடியோ இருக்கிறது, வீடியோ இருக்கிறது என்று சொல்லி தான் கட்சியை விட்டு விலகினீர்கள். ஆனால், கட்சியை விட்டு உங்களை விலக்கிய பிறகு, எங்கே அந்த ஆடியோ, வீடியோ என்று கேட்டால், என்னிடம் எதுமே கிடையாது, அது திருச்சி சூர்யாவிடம் தான் இருக்கிறது என்று சொல்வது முதலில் சரியா?

Gayathri - Updatenews360

உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். உங்களுக்கு திராணி தைரியம் இருந்தால், ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம். நாம் இருவரும் நேரடியாக சந்திக்க?நான் தயார் நீங்கள் தயாரா? முதலில் என்கிட்ட வா மா,” எனக் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

திருச்சி சூர்யாவின் இந்த பதிவிற்கு பதில் கொடுக்கும் விதமாக காயத்ரி ரகுராம் விடுத்த பதிவில், ” அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை.

இது காரியகர்த்தாவை சீர்ப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது. இப்படித்தான் அண்ணாமலை தேசிய அரசியல் கட்சியில் காரியகர்த்தாவை கட்சிக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு பதிலாக, தனது சுயநலத்திற்காக ஒரு காரியகர்த்தாவை அடி ஆளாக மாறுகிறார். வார்ரூம் ஜோக்கர்கள், கேசவவிநாயகம் ஜி மற்றும் அமைச்சர் எல்.முருகன் ஜியை தாக்க அண்ணாமலை கொடுத்த அடி ஆளு வேலையை முதலில் செய்யுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருவரின் மோதலால் இருதரப்பினரும் மாறி மாறி கருத்துப் போரில் ஈடுபட்டு வருவதால், சமூகவலைதளமே கொதித்து போயிள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 457

    0

    0