அடிச்ச அடி அப்படி.. சின்னவரு இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்காரு : திருச்சி சூர்யா சிவா புத்திமதி!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2024, 4:17 pm
அடிச்ச அடி அப்படி.. சின்னவரு இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்காரு : திருச்சி சூர்யா சிவா புத்திமதி!
திமுகவில் மிக முக்கிய சீனியர் தலைவர்களில் ஒருவாக இருப்பவர் திருச்சி சிவா. திமுக எம்பியாக உள்ள திருச்சி சிவா வரும் நாடாளுமன்ற தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ளார்
இவரது மகன் சூர்யா சிவா, கடந்த 2022ஆம் ஆண்டு திமுகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என கூறி அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைந்தார்.
அண்ணாமலையுடன் மிக நெருக்கமாக அறியப்பட்ட சூர்யா சிவா, பின்னர் பாஜகவில் ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வகித்தார். அந்த சமயத்தில் பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த டெய்சிக்கும், திருச்சி சூர்யா சிவாக்கு இடையே பதவி வழங்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.
டெய்சிக்கு போன் கால் செய்து சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ வைரலானது. பின்னர் திருச்சி சூர்யா சிவா தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்ப்டடார்.
6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுவெளியில் தலைகாட்டாமல் சூர்யா சிவா ஒதுங்கியே இருந்தார்.
இதனால் அவர் மீண்டும் திமுகவில் இணைவார் அல்லது அதிமுகவில் இணையலாம் என்ற பேச்சுக்கள் மட்டும் அவ்வப்போது அடிப்பட்டது. அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான போது, மீண்டும் சூர்யா சிவாவுக்கு பதவி வழங்கப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து மீண்டும் பாஜகவில் இணைந்து செயல்படத் தொடங்கிய அவருக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் திருச்சி சூர்யா சிவாவை பிளாக் செய்துள்ளார். இதை கவனித்த சூர்யா சிவா, இது குறித்து விமர்சித்துள்ளார்.
தனது X தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சூர்யா சிவா, அடிச்ச அடி அப்படி, சின்னவரு இன்னும் சின்ன புள்ளத்தனமாவே இருக்காரு என பதிவிட்டு, நகடிர் வடிவேலு புகைப்படத்தை வைத்து விம்ர்சித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், திருச்சி சூர்யா சிவாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.