திமுகவில் காயத்ரி ரகுராம்…? உதயநிதி ஸ்டாலின் போட்ட திடீர் கண்டீசன் : திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
26 January 2023, 2:24 pm

காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி காயத்ரி ரகுராம் பாஜக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். அதுமுதல் அடுத்தடுத்து அண்ணாமலையை சீண்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துக்கு பாஜகவினரும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் பாஜகவும், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையையும் எதிர்த்தும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரியும் நடைபயணத்தை காயத்ரி ரகுராம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சில காரணங்களுக்காக அந்த நடைபயணத்தை ஒத்திவைப்பதாகவும் திடீரென அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

Gayathri - Updatenews360

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஊழலுக்கு எதிரான யாத்திரைக்கு சொந்த பணத்தை செலவிட மாட்ட ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் 15 முதல் 25 லட்சம் வரை வசூல் செய்ய உத்தரவிட்டீர்கள் ஆனால் டெல்லியிலிருந்தும் தனியாக வசூல் செய்கிறீர்கள். இது ஊழலுக்கு எதிரான யாத்திரை போல் தெரியவில்லை.. அலிபாபா 48 திருடர்கள் சொந்தக் கட்சி தொடங்குவது போல் தெரிகிறது,” என விமர்சித்திருந்தார்.

இதனிடையே, அவரது நடைபயணத்திற்கு போதிய ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காததால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், காயத்ரி ரகுராமின் செயலை விமர்சித்து மீண்டும் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.

https://twitter.com/TrichySuriyaBJP/status/1618502964896993281

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று யாத்திரை நடத்துறேன்னு சொல்லிட்டு ஊர் ஊரா ஓசியில் ரூம் போட்டு கொடுங்கள் என்று கேட்டியாமே யாரும் போட முடியாதுன்னு சொன்னதுனால தான் நடை பயணத்தை தள்ளி வச்சிட்டியாமே ரூம்கே வழியில்ல இதுல போற இடம் எல்லாம் பாட்டில் வேற கேக்குறியாமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், திமுகவில் காயத்ரி ரகுராம் இணைய இருந்ததாகவும், ஆனால், உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு அவரை கட்சியில் இணைக்க வேண்டாம் என்று கூறியதாகவும் திருச்சி சூர்யா மற்றொரு பதிவில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 480

    0

    0