தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை அவமத்து பேசியதாக புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் போலே பாபா சாமியாரின் இந்து மத ஆன்மீக சொற்பொழிவின்போது நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அவர்களை சென்று சந்திக்கும்போது அவருக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி செல்லும் வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.
அவருக்கு [ரேகா சர்மாவுக்கு] ஏன் மற்றொருவர் குடைபிடிக்கிறார் என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது எக்ஸ் தளத்தில் மஹுவா மொய்த்ரா, அவர் [ரேகா சர்மா] தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கிப் பிடிப்பதில் பிசியாக உள்ளார் என்று பதிலளித்திருந்தார்.
பின் அந்த பதிவை நீக்கினார். இந்த பதிவுக்கு ரேகா சர்மா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மஹுவா மீது மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது, எனவே தற்போது மஹுவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.