அமைச்சரவையின் உள்ளே டிஆர்பி.. வெளியே நாசர் : டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு.. முழு விபரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 9:54 pm

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர் பதவியேற்பு விழா வரும் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

டி.ஆர்.பி.ராஜாவுக்கு நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி ராஜாவுக்கு என்ன இலாக்காக ஒதுக்கப்பட்டுள்ளுது என்பது குறித்த தகவல் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் இடம்பெறாமல் இருந்த நிலையல் டிஆர்பி ராஜாவுக்கு இடம்பிடித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!