பேட்டி கொடுக்கும் போது பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறிய டிடிஎஃப் வாசன் : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 8:07 pm

டிடிஎஃப் வாசன் 40 ரசிகர்களின் முகத்தை தனது உடம்பில் பச்சைக்குத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. கடலூரில் டிடிஃப் ரசிகர்களை தாக்கியதின் காரணமாக அந்த சம்பவத்தை மறக்க கூடாது என்பதற்காகவும் தனது ரசிகர்களுக்காகவும் பச்சைக்குத்தி கொள்வதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

பச்சை குத்தும் கடைக்கு ஜிபி முத்தும் வந்துள்ளார். அடிப்படையில் வாசன் ஒரு யூடியுபர் மற்றும் டிராவலர். அவர் டிவின் திராட்டிலர்ஸ்’ (Twin Throttlers) என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரை கிட்டத்தட்ட 28 லட்சம் நபர்கள் யூடியுபில் பின் தொடர்கிறார்கள்.

தன்னை பின் தொடர்பவர்களை அவர் டிடிஎஃப் என அழைக்கிறார். அதாவது ‘டிவின் திராட்டிலர் ஃபேமிலி’.பைக்கில் நெடும்பயணம் செய்து அதை வீடியோவாக, விலாகாக (vlog) போடுவதே இந்த சேனலின் பிரதான பணி.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அவருக்கு என்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் வாசன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்காக பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன. இதில் நிறைய சர்ச்சைகளும் ஏற்பட்டது. லட்சக்கணக்கில் குவிந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ஆத்திரமடைந்தனர்.

இதனிடையே டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) கூறுகையில், போலீஸர் யாரையும் தாக்கவில்லை. போலீசார் பயமுறுத்துவதற்காக தரையில் தடியை அடித்தார்கள். பல இடங்களில் போலீசார் அன்புடன் நடந்து கொள்வதாகவும் பல இடங்களிலும் செல்லும் பொழுது அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், அண்ணன்கள் என பலர் உள்ளதால் பல்வேறு சிக்கலில் சிக்கி கொள்கிறேன்.

இருப்பினும் அந்த சம்பவத்தின் தொடர்பாகத்தான் தான் பச்சைக்குத்திக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர் கூறுகையில் பசங்க மேல உள்ள பாசத்தின் காரணமாகவும், அந்த சம்பவத்தில் ரசிகர்களை தாக்கியதன் காரணமாகவும் இந்த பச்சையை குத்திக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனல் வாசனை பேட்டி எடுத்துள்ளது. பேட்டியில் நெறியாளர் காரசாரமான கேள்விகளை முன் வைக்கிறார். அதற்கு பதிலளித்துக் கொண்டே வந்த அவர், நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், வாசன் பாதியில் வெளியேறிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 567

    0

    0