டிடிவி தினகரனுக்கு ஆப்பு வைத்த கூட்டணிகள்…. அதிமுகவில் முதல் ஆளாக இணைந்த கட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 11:28 am

டிடிவி தினகரனுக்கு ஆப்பு வைத்த கூட்டணிகள். அதிமுகவில் முதல் ஆளாக இணைந்த கட்சி!!

தெலுங்கானாவின் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டது மஜ்லிஸ் கட்சி. இதன் தலைவர் ஓவைசி. தெலுங்கானா மாநில அரசியல் கட்சியாக அறியப்பட்ட ஓவைசி கட்சி, கர்நாடகா, மகாராஷ்டிரா என ஒவ்வொரு மாநிலமாக கால் பதித்தது. பீகார் தேர்தலில் 5 இடங்களில் வென்றது பெரும் பரபரப்பையும் அதிர்வையும் உருவாக்கியது. அந்த 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடியில் இணைந்துவிட்டது தனிக் கதை.

இதனால் ஓவைசி கட்சி குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது. ச தமிழ்நாடு சட்டசபை தேர்தலிலும் ஓவைசி கட்சி போட்டியிடும் என அறிவித்தது. ஓவைசி கட்சி திமுக கூட்டணியில் இணையக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டது ஓவைசி கட்சி.

இருப்பினும் தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற்றும் ஆதரித்தும் வந்தன. பாஜகவுக்கு எதிரான பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே கிடைத்தன. இதனால் ஓவைசி கட்சி, எந்த ஒரு தாக்கத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இந்த கூட்டணி முறிவை உறுதி செய்த கையோடு, இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தையும் தொடங்கி இருந்தார்.

திமுக கூட்டணியை ஆதரித்த தமிமுன் அன்சாரி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது ஓவைசி கட்சியும் வாழ்த்து தெரிவித்தது.

இந்த நிலையில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?