விஜய் மாநாட்டுக்கு வருபவர்கள் இப்படியெல்லாம் வரக்கூடாது : மின்வாரியத்துறை கண்டிஷன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 5:59 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாநாட்டிற்காக பதினாறாயிரம் மின்விளக்குகள் பயன்படுத்தப்படவுள்ளது. மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பெறவில்லை. மாநாடு முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பயன்படுத்துகின்றனர்.

மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை மாநாட்டு கடலில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், மாநாட்டு திடலில் இருக்கும் மின் ஒயர்கள் மின்வாரியத்திற்கு தொகை செலுத்தியதால் தற்காலிகமாக அப்புறப்படுத்தி கொடுக்கப்பட்டது. வாகனம் நிறுத்தும் இடங்களில் தாழ்வாக சென்ற மின் பெயர்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.

மாநாடு திடல் வெளியே செல்லக்கூடிய மின் ஒயர்கள் மின்சாரம் செல்வதால் அந்த பாதையில் எங்கள் மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் மேலும் மாநாடு கொண்டுவரப்படும் இரும்பு கம்பிகள் உயரமான அளவிற்கு கொண்டு வர வேண்டாம் என்றும் மேலும் வாகனத்தில் வரும் தொண்டர்கள் மேலே உட்கார்ந்து வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி