ஆதாரமே இல்ல… கையை விரித்த நீதிமன்றம் : நிர்மலா தேவி வழக்கில் TWIST.. 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 2:42 pm

ஆதாரமே இல்ல… கையை விரித்த நீதிமன்றம் : நிர்மலா தேவி வழக்கில் TWIST.. 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு தொடர்பாக மதுரை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி அதிகாரிகள் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க: கோவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை? தீர்ப்பை வெளியிட காத்திருக்கும் Madras High court.!!

எனவே சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். நீண்ட நாட்கள் சிறையில் இருந்த மூன்று பேரும் தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற நிர்மலா தேவி வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகிய இருவரை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல் மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேடி குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…