சென்னையில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும் போது, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசியல் சாசனம் அளித்த கருத்து சுதந்திர உரிமையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தற்போது உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்கிறீர்கள்.
நீங்கள் ஒரு மாநிலத்தின் அமைச்சர். பொறுப்பு உணர்ந்தும் பின்விளைவுகள் குறித்து யோசித்தும் பேச வேண்டும் என காட்டமாக கூறியிருந்தனர்.
இந்த வழக்குகளை இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. பிற மாநில உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்ற முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் பிற மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் அனைவரும் நவம்பர் 18-ந் தேதி முன்னதாக பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.