முதன்முறையாக பூஜ்ஜியத்திற்கு வந்த இரு மாவட்டங்கள் : டாப்பில் தலைநகரம்.. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 9:51 pm

சென்னை: தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 34,47,581 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,997 ஆக உள்ளது. ஒரே நாளில் 1,913 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 144 ஆக உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னை 144 பேருக்கும், கோவையில் 81 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும், திருப்பூரில் 14 பேருக்கும், சேலத்தில் 17 பேருக்கும், ஈரோட்டில் 25 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1324

    1

    0