இந்திய வம்சாவளி மருத்துவர்; சேவைக்கான அங்கீகாரம்; பெயர் சூட்டி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

Author: Sudha
13 July 2024, 10:01 am

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜார்ஜ் மேத்யூ.தற்போது. அவருக்கு வயது 84. இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தனது திருமணத்திற்கு பின் மனைவியுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புலம்பெயர்ந்தார்

அங்கு பொது மருத்துவ இயக்குனர்,மருத்துவ ஆலோசகர் போன்ற உயர் பதவிகளை வகித்துள்ளார்.அவர் குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது.

மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சேவையை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு தெருவுக்கு மருத்துவர் ஜார்ஜ் மாத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் மாநகராட்சிகள் துறை அவர் பெயரை சூட்டி கௌரவித்துள்ளது.

இதை பற்றி மருத்துவர் ஜார்ஜ் மாத்யூ கூறுகையில் மருத்துவத் துறையில் என்னுடைய சேவை அங்கீகரிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அமீரக அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!