29 பைசாவை மூட்டை கட்டி வீட்டில் தூங்க வைக்கும் வரை திமுக தூங்காது : உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

29 பைசாவை மூட்டை கட்டி வீட்டில் தூங்க வைக்கும் வரை திமுக தூங்காது : உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆதரித்து நேற்று முதல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று அண்ணா நகர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க வந்தேன் ஆனால் தூத்துக்குடி வந்து பார்த்தால் தேர்தல் முடிந்து வெற்றிபெற்றதுபோல் அவ்வளவு வரவேற்பு அளித்திருக்கிறீர்கள் என கூறினார்.

கடந்த 19-நாட்களாக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றேன் இன்று தூத்துக்குடி முடித்துவிட்டு சென்னை செல்கின்றேன் நான் செல்லவில்லை என்றால் வீட்டுக்கே என்னை அடையாளம் தெரியாமல் ஆகிவிடும்.

ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்யும் போது வேட்பாளரை பார்த்து கலைஞரின் ஆசி பெற்று வேட்பாளர் என்று செல்வேன். ஆனால் தூத்துக்குடியை பொறுத்த வரையில் அப்படி சொல்ல முடியாது ஏனென்றால் இந்த தொகுதியில் நிற்பதே கலைஞர்தான்.

எனவே கனிமொழி அவர்கள் அவர்களை குறைந்தது 6-லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.பிரச்சாரத்தின் நடுவே வந்த ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடுங்கள் என்று அமைச்சர் உதயநிதி தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து உடனடியாக சாரை சாரையாக இருந்த மக்கள் சாலையில் இருந்து வழி விட்டு ஆம்புலன்ஸை கடக்க செய்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கடந்தமுறை வெற்றிபெற்ற கனிமொழி அவர்கள் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று வந்தவுடன் கேஸ் சிலிண்டர் 500-ரூபாய்க்கும் பெட்ரோல் விலை 70-ரூபாய் டீசல் விலை 65-ரூபாய்க்கும் கொடுக்கப்படும் என நமது முதல்வர் வாக்குறு அளித்துள்ளார்.

ஏனென்றால் அவர் கலைஞரின் மகன் செய்வதை மட்டும்தான் சொல்வார். யார் காலிலும் விழுந்து முதல்வர் ஆகவில்லை அதைபோல் யாருக்கும் துரோகம் செய்து ஆட்சிக்கு வரவில்லை.

தூத்துக்குடி வளர்ச்சி திட்டத்திற்க்காக சுமார் 85-ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். துப்பாக்கி சூட்டினை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி இல்லை நாங்கள் என கூறிய அவர், ஒரு திட்டத்தை கொண்டு வருவது பெரிதல்ல அதனால் எத்தனை பேர் பயன்பெறுகின்றார்கள் என்பதுதான் பெரிது.

பெண்களை உயர்த்த வேண்டும் என்றுதான் முதல்வர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3-ஆயிரம் மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை மாதம் ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலையே முதன் முதலாக காலை உணவு திட்டம் கொண்டு வந்து நல்ல வரவேற்பை பெற்றவர் நமது முதல்வர். கனடா நாட்டு பிரதமரை நமது முதல்வர் கொண்டு வந்த காலை உணவு திட்டத் வரவேற்று வாழ்த்தி கனடா நாட்டிலும் இந்த திட்டத்தை கொண்டு வர ஆலோசனை செய்து வருகின்றார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் அனைவருக்கும் கிடைக்கும். என நான் உறுதியளிக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்

கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தின் போது 10-அமைச்சர்களை தமிழக முதல்வர் அனுப்பினார் அனைவரும் இங்கிருந்து தேவையான உதவிகளை செய்து இயல்பு நிலைக்கு திரும்பியபிந்தான் அனைவரும் சென்றோம் மழை வெள்ளத்தை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மழையினால் உடைந்த பாலங்கள் கரைகளை சரிசெய்ய 218-கோடி ரூபாய் தமிழக முதல்வர் ஒதுக்கி சரிசெய்தார் ஆனால் மத்திய அரசு ஒரு உதவியோ நிவாரண உதவியோ செய்யவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மட்டும் 2-ஆயிரம் கோடிக்கு மேல் தமிழக முதல்வர் ஒதுக்கி உதவி செய்தார் ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் வந்து பார்வையிட்டு சென்றதோடு சரி ஒரு உதவியையும் செய்யவில்லை. மழைக்கு கேட்ட நிதியை தராமல் எனக்கு பாடம் எடுத்தார் மத்திய அமைச்சர் நிர்மாலா சீத்தாராமன் உதயநிதி மரியாதையா பேச வேண்டும் என்று .

நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது அதனை இங்கு இருந்த அப்பொதைய அரசும் எதிர்க்காமல் இருந்தனர் இதனால் பல மாணவர்கள் உயிர் பலியானர்கள்.

சட்டமன்ற-த்து ஆளுனர் வருவது என்பது மாயி படத்தில் வாமா மின்னல் என்பது போல் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. என அமைச்சர் உதயநிதி பேச்சினார்.

ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 5-ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார் ஆனால் அந்த ஒரு கல்லோடு அந்த திட்டம் நிற்கின்றது அந்த கல்லை நான் எடுத்து வந்துவிட்டேன் வேலை ஆரம்பிக்கும்போது அந்த கல்லை நான் தாரேன் என்று கூறிவிட்டேன்

தமிழக முதல்வர் மகளிர் உரிமை தொகை,மக்களை தேடி மருத்துவம் என என்னற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மத்திய அரசையும் அதிமுக கட்சியையும் விரட்டி அடிக்காம விடமாட்டோம் என கூறிய அவர்

ஜூன் 3-ம் தேதி கலைஞரின் 101-ம் ஆண்டு பிறந்த தினம் அடுத்த நாள் வாக்கு எண்ணிக்கை கலைஞருக்கு நாம் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு நாற்பதுக்கு நாற்பது வெற்றியாகதான் இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு தற்போது ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது 29 பைசா என அந்த 29 பைசாவை மூடை கட்டி வீட்டிற்கு அனுப்பி தூங்க வைக்கும் வரை திமுகவினருக்கு தூக்கம் வராது என பேசிய உதயநிதி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் அதிலும் தூத்துக்குடியில் போட்டியிடக்கூடிய கனிமொழி கருணாநிதியை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து பேசிய கனிமொழி தனக்காக உதயநிதியின் நூறாவது பிரச்சாரத்தை தூத்துக்குடியில் செய்தும் தொடர்ந்து நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்த உதயநிதிக்கு நன்றி என கனிமொழி கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

41 minutes ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

59 minutes ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

2 hours ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

2 hours ago

This website uses cookies.