உதயநிதியின் புதிய யுக்தி : SPOT ACTION கைக்கொடுக்குமா? பொதுமக்களுக்காக வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 6:29 pm

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 -ம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திலிருந்தும் விலகிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் தீவிரமாக செயலாற்றிவருகிறார்.

இந்த நிலையில் அமைச்சராக தனது செயல்பாடுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், புதிதாக அவருடைய அலுவலகத்தின் சார்பில் டிவிட்டர் பக்கம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு @Udhaystalin அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ @Twitter பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். நன்றி. ஆஃபிஸ் ஆஃப் உதயநிதி ஸ்டாலின் (Office Of Udhayanidhi Stalin) என்ற அந்த பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல் பதிவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 411

    0

    0