சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட சார்பில், வழக்கறிஞர் எம்.எம்.கோபி ஏற்பாட்டி அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலை கொடுக்காமல் இருப்பதாகவும், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சியில் தான் என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
நடுநிலையோடு செயல்பட வேண்டிய பேரவை தலைவர், பேரவை மாண்பையே சிதைக்கும் விதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து சொல்வதை கடந்து, பேரவை உறுப்பினர் உதயநிதியின் மகளுக்கு பேரவையில் வாழ்த்து சொல்வதன் மூலம் பேரவை தலைவரின் மாண்பை சிதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கிவிட்டு, அதிமுக உறுப்பினர்களுக்கு பாஸ் கேட்டால் அமித் ஷாவின் மகனிடம் கேட்க சொல்லும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு 3 மாடங்களின் டிக்கெட்டுகளை யாருக்காக புக் செய்து வைத்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
திமுக ஆட்சியில் தான் விளையாட்டில் கூட அரசியல் கலந்திருப்பதாகவும் டி ஜெயக்குமார் விமர்சித்தார்.
நொச்சிக்கு குப்பத்தில் மீனவர்களுக்கு உரிய இடம் தராமல் மாநகராட்சி ஊழியர்களும், திமுக அரசும் நடந்து கொள்வது மீனவர்களின் பாதுகாப்பின்மையை காண்பிக்கிறது.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் பேச வாய்ப்பு மறுக்கும் பேரவை தலைவர் தந்தை மகன் புகழ் பாடுவதற்கு மட்டும் வாய்ப்பளித்து புகழ் பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.