அரைத்த மாவையே அரைக்கும் உதயநிதி : பேச விஷயம் இல்லாமல் பிரச்சாரத்தில் திணறும் திமுக!!

அரைத்த மாவையே அரைக்கும் உதயநிதி : பேச விஷயம் இல்லாமல் பிரச்சாரத்தில் திணறும் திமுக!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழகத்தில் தேர்தல் பணிகளை தீவிரமாக துவங்கியது ஆளும் கட்சியான திமுக. பின்னர் தமிழத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டின.

தமிகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் வெல்ல அரசியல் கட்சி களப்பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அதிமுக ஆட்சியையும் தற்போதைய திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் மீது வைத்து வருகிறார்.

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்கள் திமுக மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அமைச்சர் உதயநிதியோ, தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்கிறாரே தவிர, இது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதையே மறந்து மோடி மீது விமர்சனங்களை குறைத்து வருகிறோரோ என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த போட்டோவை உதயநிதி பிரச்சாரத்தில் பயன்படுத்தினார். தற்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் அதே போட்டோவை பயன்படுத்தி வருகிறார்.

இனி எத்தனை காலம் தான் எடப்பாடி காலில் விழும் போட்டோவை காட்டி வாக்கு கேட்பீர்கள். நாம் ஏதும் நல்லது செய்யவில்லை என்பது போல உதயநிதியின் பிரச்சாரம் உள்ளது என்று சாமானியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுக கொண்டு வந்த திட்டங்கள் பற்றி பிரச்சாரம் செய்யாமல், எடப்பாடி பழனிசாமியை உதயநிதி விமர்சிப்பதற்கு காரணமே வேறு என அரசியல் விமர்சகர்கள் அடுக்கும் குற்றச்சாட்டுகள் இதுதான்.

நீட் ரத்து என கூறி ஆட்சி கட்டிலில் ஏறிய திமுக, இது வரை நீட் தேர்வை ரத்து செய்யவும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத்தான் தெரியும் என கூறிய உதயநிதி, 3 வருடங்களாகியும் அந்த ரகசியத்தை சொல்லவில்லை. இதை நம்ப தயாராக இல்லை என மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சியை எடுக்க சென்றுவிட்டனர்.

ஆனால் உதயநிதியோ, எடப்பாடி பழனிசாமி காலில் விழும் போட் காண்பித்து வாக்கு கேட்பது இந்த தேர்தலில் எடுபடுமா என்றால் அது சந்தேகமே..

ஏனென்றால், மழை வெள்ளத்தின் போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என ஆளும்கட்சியினர் யாரும் களப்பணி செய்யாதததால்தான்.

இதற்கு உதாரணம் தான், தேர்தலுக்காக தற்போது களத்தில் இறங்கி சந்தித்து வரும் திமுகவினரை மக்கள் கேள்வி கேட்டு விரட்டியடித்து வருகின்றனர்.

செய்த நன்மைகளை சொல்லி வாக்கு கேட்டாலே வென்று விடலாம், ஆனால் திமுகவினர், நல்லது ஏதும் செய்யாததால் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்கிறதோ என்ற கேள்வியை முன்னெடுக்க வைக்கிறது.

அமைச்சர் உதயநிதியோ இன்னும் ஒரு படி மேலே சென்று, சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து சில ஆபாச வார்த்தைகளால் பேசி வாக்கு சேகரித்தது அவமானத்தின் உச்சக்கட்டம். இதை திமுகவினர் வேண்டுமென்றால் ரசிக்கலாம், ஆனால் இதை கேட்கும் சாமானியர்கள் நிச்சயமாக ரசிக்க வாய்ப்பே இல்லை.

திமுகவினர் செய்த திட்டஙகளை குறித்து வாக்கு சேகரிக்காமல், கற்பனை வறட்சியில் தவிக்கிறது என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது X தளப்பக்கத்தில் விமர்சித்துள்ளார். பேச விஷயங்கள் இல்லாமல், திணறிக் கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

ஆகவே, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசி பேசி வாக்கு சேகரிக்காமல், கொண்டு வந்த திட்டங்களை,கொண்டு வரப்போகும் திட்டங்களை கேட்டு வாக்கு சேகரிப்பதே அரசியல் நாகரீகம் என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உதயநிதி இதை உணர்வாரா? வாக்கு சேகரிக்க வேறு ஏதும் யுக்தியை கையாள்வாரா என்பது வரும் பரப்புரை கூட்டங்களில் காணலாம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

9 minutes ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

27 minutes ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

1 hour ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

1 hour ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

2 hours ago

This website uses cookies.