முட்டையில் இருந்து புல்லட் பாண்டி அவதாரம் : அமைச்சர் உதயநிதி குறித்து அண்ணாமலை கிண்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 9:12 am

முட்டையில் இருந்து புல்லட் பாண்டி அவதாரம் : உதயநிதியை கிண்டல் செய்த அண்ணாமலை!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியலில் திமுகவினர் கை வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய அவர், 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற பல தலைமுறைகளாக திமுகவினர் அரசியல் செய்வதாக கூறினார்.

திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட்டில் உள்ள ஒரு வார்த்தையை கூட ஒழிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, தற்போது உதயநிதி ஸ்டாலின் முட்டையில் இருந்து புது அவதாரமாக புல்லட் பாண்டியாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறினார்.

திமுகவின் சாராய ஆலைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் 5,500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அண்ணாமலை, திமுக அரசிற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் திராவிட மாடல் அரசு என பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்தார்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி