முட்டையில் இருந்து புல்லட் பாண்டி அவதாரம் : உதயநிதியை கிண்டல் செய்த அண்ணாமலை!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நடைபயண யாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியலில் திமுகவினர் கை வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய அவர், 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற பல தலைமுறைகளாக திமுகவினர் அரசியல் செய்வதாக கூறினார்.
திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட்டில் உள்ள ஒரு வார்த்தையை கூட ஒழிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, தற்போது உதயநிதி ஸ்டாலின் முட்டையில் இருந்து புது அவதாரமாக புல்லட் பாண்டியாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறினார்.
திமுகவின் சாராய ஆலைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் 5,500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அண்ணாமலை, திமுக அரசிற்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் திராவிட மாடல் அரசு என பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்தார்
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…
மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…
சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது…
கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல்…
This website uses cookies.