ஏதாவது கேட்டுவிட்டு புளங்காகிதம் அடைவதை நிறுத்துங்க உதயநிதி.. பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 9:28 am

ஏதாவது கேட்டுவிட்டு புளங்காகிதம் அடைவதை நிறுத்துங்க உதயநிதி.. நாராயணன் திருப்பதி கண்டனம்!!

தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், இபிஎஸ் நிதியை பெற்றுத்தர வேண்டும், தமிழக அரசு கோரியுள்ள ₨5,060 கோடி இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் மத்திய அரசிடமிருந்து ஈபிஎஸ் நிதியை பெற்று தர வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இபிஎஸ் முதல்வராக இருந்த போது ரூ.50,000 கோடி இடைக்கால நிவாரணத்தை கேட்டார். அன்றைய எதிர்க்கட்சி தி.மு.க பெற்று தந்ததா?

இடைக்கால நிவாரணம் என்றால் என்ன என்றே தெரியாது, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எதையாவது கேட்டு விட்டு புளகாங்கிதம் அடைவதை நிறுத்தி கொள்ளவும். இடைக்கால நிவாரணம் எவ்வளவு என்பதை முடிவு செய்வது மாநில அரசு தான் என்பது கூட ஒரு அமைச்சருக்கு தெரியவில்லை என்பது வெட்கட்கேடு. இந்த வருட மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு ரூபாய்.900 கோடி என்று முடிவு செய்தது தி மு க அரசு தான் என்பது கூட தெரியாமல் பேசுவது அறியாமை. மலிவு அரசியல். முதிர்ச்சியின்மை என பதிவிட்டுள்ளார்,

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!