மத்திய அமைச்சர்களை சந்திக்கும் உதயநிதி : அமைச்சரான பின் டெல்லி பயணம்.. வெளியான அரசியல் காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 7:33 pm

அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை சந்தித்து பேசும் அவர் மத்திய அமைச்சர்களையும் 28ஆம் தேதி நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனான டெல்லி பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது. தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அங்கு தனது துறை ரீதியான சில கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை நாளை மறுதினம் சந்தித்து பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்துக்கும் உதயநிதி ஸ்டாலின் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் காயம் அடைந்த மாணவர்களோடு வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்து தைரியம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?