மரத்தின் மேல் வீடு: அசத்திய விவசாயிகள்: ஆச்சரியத்தில் உறைந்த வரலாற்று ஆய்வாளர்கள்…!!
Author: Sudha18 August 2024, 1:45 pm
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, மர வீட்டில் வசிக்கும் பெருமாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறும் போது இப்பகுதியிலுள்ள விவசாயிகள், பூர்வகுடிகளாகவும், மானாவாரியாக கொள்ளு, சோளம், மொச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். மலைப்பகுதிகளிலிருந்து, தண்ணீர் குடிக்க வரும் யானைகள், தென்னை மரங்களை மட்டுமே சாய்த்து வருகின்றன. மற்ற மரங்களை சேதப்படுத்துவதில்லை.
இருந்தாலும், பாதுகாப்பாக இருப்பதற்காக, உயரமாக வளர்ந்துள்ள வேம்பு மரத்தில், மரக்குச்சிகளை கொண்டு, உறுதியாக வீடு கட்டியுள்ளனர்.இந்த வீடுகள் மழை, வெயில் காலங்களிலும், மற்ற வன விலங்குகள் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும்.
மரத்தின் கிளைகளை ஒதுக்கி, அவற்றை கொண்டே, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக்கிக் கட்டி வீடு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கும் வகையில், மரக்கட்டைகளில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வித்தியாசமான வீடுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.