புரிஞ்சிட்டு பேசுங்க.. உங்களுக்கு கள யதார்த்தமே தெரியல.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு அண்ணாமலை பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 4:46 pm

புரிஞ்சிட்டு பேசுங்க.. உங்களுக்கு கள யதார்த்தமே தெரியல.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு அண்ணாமலை பதிலடி!

தமிழகத்திற்கு தற்போது அதிக முறை வரும் பிரதமர் மோடியின் தமிழக பயணம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். ஆனால், மிக்ஜாம் புயல் பதிப்பை காண அவர் வரவில்லை. தமிழகஅரசு நிவாரணரமாக கேட்ட 37,907 கோடி ரூபாயை தரவில்லை.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கோவிட் 19 உள்ளிட்ட காரணங்களால் சிறுகுறு தொழிற்சாலை தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அதனை பற்றி பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்தார்.? பாஜகவுக்காக தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களுக்காக நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்துள்ளார் பிரதமர் மோடி என பல்வேறு விமர்சனங்களை ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், திரு ஜெய்ராம் ரமேஷ் அவர்களே, கோபுரத்தில் அமர்ந்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கள யதார்த்தம் தெரிவதில்லை.

தமிழகம் கேட்ட வெள்ள நிவாரணம் 37,907 கோடி ருபாய் அல்ல, 15,645 கோடி தான் (தரவுகளின்படி). தமிழக அரசுக்கு மத்திய அரசு 2013 கோடி ரூபாய் & 3406 கோடி ரூபாய் கொடுத்தது. மக்களை ஏமாற்றுவது என்பது தான் I.N.D.I.A கூட்டணியின் ஒற்றைப் புள்ளியாக உள்ளதா. தகவல்களை முழுதாக தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் என பல்வேறு விமர்சன கேள்விகளை ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்ட கருத்துக்கு கிழே பதிவிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?